Saturday, 16 April 2016

MY TRAVEL - PATTINATHAR TEMPLE, CHENNAI

பட்டினத்தார் ஜீவ சமாதி:

பட்டினத்தார் ஜீவ சமா
திக்கு சென்றிருந்தேன்..அரசின் நிதியில் அந்த இடம் இப்போது கோவிலாக மாறிவிட்டது..அர்ச்சனை,பூசை செய்ய ஐயர் ஒருவர் என மாறியுள்ளது...காதறுந்த ஊசி கூட கடைசி காலத்தில் துணைக்கு வராது என்று உணர்த்திய இவரின் இடத்தில் நெய் விளக்கு ஏற்றுகிறார்கள்... இறைவனை அடைய பூஜை புனஸ்காரம் எல்லாம் தேவையில்லை என்று சொன்னவர் பட்டினத்தார்..இன்று அவரின் இடம் கோவிலாக!!!
எளிமை மட்டும் தான் இறைவனை அடையும் என்றார்..அவரது பாடல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...

தனது தாயின் சடலத்திற்கு பச்சை வாழை மட்டையை வைத்து தீ மூட்டினார்..அப்போது பாடிய பாடல்...

"முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையிலே
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!"  

Friday, 18 March 2016


இனிக்கு ஏப்ரல் பூலா??
இன்றைய தமிழ் ஹிந்து 10ம் பக்க தலைப்புகள்

மக்கள் நலக்கூட்டணியை உடைக்க திமுக சதி   - தா.பாண்டியன்
அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் மீள முடியாது - வைகோ
பா.ஜா.க அணிக்கு தேமுதிக நிச்சயம் வரும் - இல.கணேசன்
பாமாகவுக்கு 82% இளைஞர்கள் ஆதரவு - அன்புமணி ராமதாஸ் 

Tuesday, 8 March 2016

இலங்கை அகதியின் அவல நிலை

இலங்கை அகதியா இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வாழ்வதை விட கொடுமை இருக்க முடியுமா??? இந்த கேள்வியை தான் மதுரை அகதி முகாமில் வசித்து வந்த இறந்து போன இலங்கை அகதி ரவீந்திரன் மரணம் உணர்த்துகிறது..அகதியாக இருப்பதால் அவர்ககளை சுயமரியாதையுடன் நடத்தக்கூடாதா? அவர்களின் நலனில் அக்கறை இருப்பதாக காட்டிகொள்ளும் அரசுகள் அவர்களின் தன்மானத்தை, சுதந்திரத்தை மறுக்கிறார்கள். இறந்து போன ரவீந்திரன் தாமதமா அகதி முகாமுக்கு வந்துள்ளனர். சிகிச்சை பெற்று வரும் தனது மகனைப் பார்த்து வருவதற்கு நேரமாகிவிட்டது என்று தெரிவித்தும் வருவாய் துறை அதிகாரிகள் ஒத்துக்கொள்ள வில்லை...அவரின் பேரை அகதிகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்...why this கொலைவெறி???  
சுதந்திர போராட்ட வீர் அமீர் ஹம்சா
சுதந்திர போரட்ட வீரர் அமீர் ஹம்சாவின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. ஹம்சா வைர வியாபாரியாக இருந்தார். விடுதலைப் போரின் போது சுபாஷ் சந்திர போஸின் படையில் இணைந்தார். தனது எல்லா செல்வங்களையும் இந்தியாவின் விடுதலை போருக்கு அளித்தார். ஜனவரி 2016ல் ஹம்சா மறைந்தார். இவரின் இறுதி நாட்கள் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் கழிந்தது. தற்போது அவரது பேர குழந்தைகள் படிப்தற்கு கட்டணம் கட்ட முடியாத நிலையில் உள்ளனர். இந்த செய்தியை நியூஸ் 7 தமிழின் மையம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பினோம். இப்போது அந்த குடும்பத்துக்கு உதவ சிலர் முனவந்துள்ளனர்.


https://www.youtube.com/watch?v=WytT5B6B-VA&index=5  

Saturday, 30 January 2016

#தவோ தே ஜிங் #லாவோ ட்சு

எனது அலமாரி

தவோ தே ஜிங் லாவோ ட்சு 
தவோ தே ஜிங் - லாவோ ட்சு

புத்தக வாசிப்பு நம்மை வெறும் கருத்தாளனாக மட்டுமில்லாமல், நம்மை இலகுவானவனாக மாற்ற வேண்டும்..அதாவது நமை இன்னும் சிறந்தவனாக மாற்ற வேண்டும்..அந்த இலகுவான தன்மையை லாவோ ட்சு நமக்கு தவோ தே ஜிங்ல் தருகிறார்...அவற்றில் சில பகுதிகள்:

மெதுவாய் வெளிச்சமாகும் வரை
யார் இருட்டை விலக்க முடியும்?
மெதுவாய்த் தெளியும் வரை
யார் கலங்களைத் தெளிய வைக்க முடியும்?
மெதுவாய் அசையும்வரை
யார் தேக்கத்தை முடிகிவிட முடியும்?

இந்த அடிப்படைகளைப் பின்பற்ற மனிதன்
முழுமைக்கு ஆசைப்படுவது இல்லை..
முழுமையற்றிருப்பதால் அவன்
சிதைந்துபோகும்போது
தன்னைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஆயிரம் மைல் பயணம்
காலடி நிலத்திலிருந்து தொடங்குகிறது
எனவே, பெரிய விசயங்களை
ஞானி ஒருபோதும் செய்ய முயல்வதில்லை;
அதனால், பெரிய விசயங்களை
அவன் எப்போதும் சாதிக்க முடிகிறது....
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


Sunday, 27 December 2015

அனைத்து சாதியினரும் அர்ச்சர்கர் ஆகலாமா?


அனைத்து சாதியினரும் அர்ச்சர்கர் ஆகலாமா? 

அனைத்து சாதியினரும் அர்ச்சர்கர் ஆகலாமா? என்ற கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியாக அமைந்தது இந்த வார கண்ணாடி நிகழ்ச்சியின் ஆவணப் படம் :

ONE : https://www.youtube.com/watch?v=Qiv8xixAT94

TWO : https://www.youtube.com/watch?v=uUweXfAFvmI

THREE : https://www.youtube.com/watch?v=ofYkHSdq-PU


Tuesday, 1 December 2015

 கடலூர் சிறுமி சொன்ன பாடம் 

கடந்த வாரம் கடலூர் மாவட்டத்திற்கு சென்றேன். வெள்ளம் ஏற்படுத்திய பதிப்புகளை பற்றிய ஆவணப் படம் தயாரிக்கச் சென்ற என்னை ஒரு குழந்தை ரொம்ப பாதித்துவிட்டாள்.. அவள் பெயர் ராஜலக்ஷ்மி... இப்போ பாரிஸ்ல பருவ  நிலை மாற்றம் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் நடந்துட்டு வருது...இந்த ராஜலக்ஷ்மி சொன்ன விஷயம் பெரிய பெரிய ஆளுமைகள் சொல்லற கருத்தை விட எளிமையா பருவ நிலை மாற்றம் பற்றி சொல்லுச்சு...
"2004 ல சுனாமி வந்தப்போ என்னோட புத்தகம் எல்லாம் காணாம போச்சு....2011ல தானே புயல்ல என்னோட வீடு காணாம போச்சு.. இப்போ இந்த வெள்ளதில எல்லாமே போச்சு... எப்போ என்னோட வீடும், ஸ்கூலும் நல்லா இருக்கும்??"

https://www.youtube.com/watch?v=JJyfWADF8AU&list=PLMFLgBNDQhNCPT6erkGUVr4eBUmKNo2CH&index=5